18 Feb 2010

Bekal Fort

நான் எப்ப பம்பாய் படம் பார்த்தேனோ அப்பில இருந்து நமக்கு ஒரு அவா இந்த இடத்தை போய்பார்க்கனும்னு. ஆனா இரண்டு வருசத்துக்கு முன்னாடிதான் போக முடிஞ்சது. மாமா மங்களூரில் இருந்ததால் மங்களூரில் இருந்து காசர்கோடு வந்து இங்கு வந்தேன். இவ்விடம் காசர்கோடில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இக்கோட்டையை சிவப்ப நாயக்கர் என்பவர் கட்டினாராம். அதன் பிறகு ஹைதர் அலி, திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆளுகையின் கிழ் இக்கோட்டை இருந்தது. இப்ப நம்ம ஆர்கியலாஜியின் கிழ். நான் போயிருந்த போது சுத்தமாக வறண்டு போயிருந்தது. மருந்துக்கு கூட புற்கள் இல்லை. மழை மற்றும் பனிக்காலங்களில் தான் பசுமையாக இருக்குமாம். அந்த காலங்களில் இங்கு செல்வது உத்தமம். இதன் அருகிலேயே பள்ளிகரா பீச் உள்ளது. இதுவும் பார்க்க அழகாக இருக்கும். இதன் அருகிலயே மங்களூர் உள்ளதால் இவ்விரண்டையும் ஒரே நாளில் பார்த்துவிடலாம். ஏனோ இங்கு சென்றபோது பம்பாயில மனிஷா மனசே பிச்சிக்கிற மாதிரி ஓடியாருவான்களே அதான் ஞாபகத்துக்கு வந்துட்டே இருந்தது.

பின் குறிப்பு : படங்கள் நெட்டில் இருந்து சுட்டவை.