18 Feb 2010

எனது பயணமும் சில செண்டிமெண்ட்ஸ்ஸூம்

னக்குன்னு சில செண்டிமெண்ட்ஸ் இருக்கு. அது விடாம என்னை துரத்திகிட்டும் இருக்கு. நான் எந்த பஸ்ல ஏறினாலும் மறக்காம "நாயகன்" படம் போட்டுடுவாங்க. இதுவரை இந்த படத்தை 20 தடவைக்கு மேல பார்த்து இருக்கேன். என்னஒன்று எத்தனை தடவை பார்த்தாலும் புதுசாபாக்குற மாதிரி ஒரு உணர்வு இருக்கு. மணியோட making அப்படி. நல்லவேளை எனக்கு விஜய் ராசி இல்லாம போச்சி.



அதே மாதிரி நாம எங்காவது பயணம் பண்ணும் தூரத்துல எங்காவது ஒரு பாடல் கேட்குமே அது மாதிரி நான் நிறையதடவை கேட்டது "சொர்க்கத்தின் வாசப்படி" பாட்டுதான். எங்கோ ஆளரவமில்லா காட்டுல கூட இந்தபாட்டை நிறைய டைம் கேட்டு இருக்கேன். இந்த song ல வர சித்தாரா முகம் என் அமர்ந்து விட்டு பிறகு எச்சமிட்டு சென்ற ஒரு பறவையை எனக்கு ஞாபகபடுத்தி கொண்டே இருக்கும்.


எங்கோ படித்த இக்கவிதை கூட அவளைத்தான் உருவகபடுத்துகிறது.


அவள் ...


உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.


அவ‌ள்
த‌ன் துக்க‌ங்க‌ளை ப‌கிர்ந்து
புதிர்க‌ளுக்கான‌ முடிச்சுக‌ளை காட்டுகிறாள் .
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்
அவளை அவளாகவே.


நாட்க‌ள் க‌ழிய‌
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்க‌ளை உங்க‌ளோடு புதைத்து

கொஞ்சமாகச் சிரிக்கிறீர்க‌ள்.

நேற்றுமில்லாத‌ இன்றுமில்லாத

த‌ருண‌த்தில்
உங்க‌ளின் அழ‌கின்மையை ப‌ட்டியலிட்டு

நீங்க‌ள்


க‌ட்டியிருந்த
ஆளுமையை சிதைக்கிறாள்
உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்.


தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை

த‌ன்
சிக்க‌ல்க‌ளின் வெற்று பிம்ப‌ங்கள் என்கிறாள்.


நீங்க‌ள்
நிராக‌ரிக்க‌ எதுவுமில்லை

உண்மையின் வெம்மையில் க‌ச‌ங்க‌த் துவ‌ங்குகிறீர்க‌ள்


இந்த‌த் தார்ச்சாலையின் ம‌திய‌ வெயிலில்
வாகனத்தில் நசுங்குவது கூட

உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்.


க‌ண்ணீரில் க‌ரைய‌த் துவ‌ங்கும்
உங்களைப் பார்த்து செருப்புத் தைப்ப‌வ‌ன்

வ‌ருத்த‌ப்பட்டிருக்கலாம்.


உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்க‌ளின் துக்க‌ம் உங்க‌ளுக்கானது

இந்த‌க் க‌ண்ணீருக்கான‌ அர்த்த‌ம் முடிவ‌ற்றது


உற‌ங்க‌ச் செல்கிறீர்க‌ள்
இர‌வின் வெறுமை உங்க‌ளை விழிக்க‌ச் செய்கிறது.



அருகில் கிட‌க்கிற‌து ஒரு நைலான் க‌யிறு.