2 Feb 2010

அம்பை டு கோதையாறு

மணிமுத்தா டேம், மணிமுத்தா அருவி;

    நீங்க அம்பையிலிருந்து கோதையாறு சென்றால் முதலில் உங்களை வரவேற்ப்பது மணிமுத்தா அணைதான். அம்பையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வணை காமராஜரால் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் மட்டும் இங்கு நீர் நிறைந்து காணப்படுமாம். மேலும் இங்கு இரண்டு காவல்துறை பயிற்சிபள்ளிகள் உள்ளன.

                                 (பெரிதாகதெரிய மேலே கிளிக்கவும்)
     இவ் அணையின் நீர் பிடிப்பு பகுதியினுடே பயணித்தால் அடுத்து வருவது மணிமுத்தா அருவி. இந்த அருவியின் உயரம் சிறியதுதான் என்றாலும் அழகும் ஆபத்தும் உள்ளது. மிகப்பெரிய சுழி உள்ளதாம்.

 
 
 
 

  மாஞ்சோலை;

    இந்த அருவியை தாண்டி மிகமோசமான மலைசாலை வழியே 1.30 மணிநேரம் பயணித்தால் முதலில் தென்படும் பெயரைபோலவே  மிக அழகிய ஊர் மாஞ்சோலை. இந்த ஊரிலிருந்துதான் தேயிலை தோட்டபகுதி ஆரம்பமாகும். அதுவரை அடர்ந்த காடுதான். இம்மலை முழுக்க சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானது. பத்மநாபபுரம் மன்னன் மார்த்தாண்டவர்மனுக்கு எதிராக நடந்த ஏழுவிட்டு பிள்ளைமார் கலகத்தின்போது சிங்கம்பட்டிஜாமீன் அவருக்கு உதவினார். அப்போது நடந்தபோரின் போது சிங்கம்பட்டி இளவரசரும் கொல்லப்பட்டார். இதன் காரணமாக மார்த்தாண்டவர்மன் இவருக்கு பொதிகை மலையோட்டிய 74000 ஏக்கர் நிலத்தை வழங்கினார். இந்தஜமீன் பரம்பரையின் 31 வது ஜாமீன் சென்னையில் படிக்கும் போது ஒரு கொலைவழக்கில் சிக்கியதால் அவருக்கு செலவுசெய்ய அதில் ஒரு 8000 ஏக்கர் நிலத்தை ஆங்கிலேயருக்கு விற்றனர். அதுதான் இப்போது மாஞ்சோலை. இந்த சிங்கம்பட்டி ஜாமீன் (அல்லது பாளையக்காரர்கள்) வழி வந்தவர்தான் புலித்தேவன். இவ்விடம் முழுக்க முழுக்க தேயிலை தோட்டங்கள்தான். இன்னும் போக போகும் இடங்களுடன் ஒப்பிட்டால் இது உயரம் குறைவுதான்.

 
  
  
  
  
  
  

 நாலுமுக்கி, ஊத்து, குதிரைவெட்டி;

    மாஞ்சோலையில் இருந்து மேலே பயணித்தால் முதலில் வருவது நாலுமுக்கி. இந்த ஊர்தான் முக்கியமான சந்திப்பு. இங்குதான் ஒரு ஹோட்டலும் உள்ளது. இதை வேறுஎங்கும் மலைமீது ஹோட்டல்கள் கிடையாது. 15 ரூபாய்க்கு முழு உணவு. ஒரு கட்டுகட்டலாம். ஒரு டி 3 ரூபா அருமையாக இருக்கும். அதேபோல் இம்மலை முழுக்க முழுக்க தனியாருக்கு சொந்தம் என்பதால் தேயிலைதோட்டத்தில் வேலைசெய்பவர்கள் தவிர யாரும் இங்கு வசிக்கமுடியாது. அவர்களுக்கு கூட குவாட்டர்ஸ் கட்டிகொடுத்துள்ளனர். உணவு மட்டும்தன் வேலைசெய்பவர்களுடயது. மற்றபடி மற்றபடி அனைத்து செலவுகளும் நிர்வாகத்துனடயது. மருத்துவமனைகள் உண்டு. இவர்களுக்கு ஒருநாள் சம்பளம் 110 ரூபாய். 

   நாலுமுக்கியிலுருந்து வலப்பக்கமாக சென்றால் ஊத்து, குதிரைவெட்டி என்ற இரண்டு ஊர்கள் வரும். குதிரைவெட்டி என்பது மலையின் மொட்டு. நல்ல viewpoint   இங்கிருந்து கயத்தாறு வரை பார்க்கலாம். மேலும் மணிமுத்தாடேம், கோரையாறு டேம் இரண்டும் தெரியும். நீங்கள் உச்சியில் நிற்கும்பொழுது மேகங்கள் உங்களை வருடிசெல்லும். மனதிற்க்கு நெருக்கமனவளின் எதிர்பாரா தீண்டலை போல் அத்தனை அற்புதமானது அந்த அனுபவம்.

 
 
 
 
  
  
  
  
  
  
  
  

கோதையாறு;

    நாளுமுக்கியிலிருந்து இடப்பக்கமாக ககச்சியை தாண்டி 6 கிலோமீட்டர் சென்றால் கோதையாறு டேம். இந்த அணை அப்பர் கோதையாறு அணை என்று அழைக்கின்றனர். இவ்வணை இரண்டு பாகங்களாக உள்ளது. மேலே ஒரு அணையும் அதன் கிழ் மற்றொரு அணையும் உள்ளது. கிழ்அணையில் விழும் நீர் பம்ப் செய்யப்பட்டு மேலனைக்கு வருகிறது. பின் இங்கிருந்து நீர் குழாய்முலம் கிழே உள்ள கிழ் கோதையாறு அணைக்கு  கொண்டுசெல்லபடுகிறது. இங்கிருந்து கிழ்கோதையாறு அணைக்கு வின்ச் போகிறது. மின்வாரிய உயர்அதிகாரிகளுக்கு மட்டும்தான் இதில் செல்ல அனுமதியாம். கிழ்கோதையாறு அணைக்கு பஸ்ஸில் செல்லவேண்டும் என்றால்  நகர்கோவிலிளிருந்துதான் செல்ல முடியும்.
   

 
   
    
   
   
   
   
   
   
   
   
   
   
 


   இங்கு செல்ல பஸ் வசதி சரியாக கிடையாது. திருநெல்வேலியில் இருந்து 2 பஸ்சும் பாபநாசத்தில் இருந்து ஒன்றும் ஆகமொத்தம் மூன்று பஸ்கள்தான். அதுவும் கோதையாரிலிருந்து கலையில் 12 மணிக்கு ஒன்றும் மலை 5 மணிக்கு ஒன்றும் இருக்கிறது. அதுவும் வந்தால்தான் உண்டு. மலைச்சலை மிகமோசமானதாக இருக்கிறது. கோதையாரிலிருந்து மாஞ்சோலை வரை 16 கிலோமீட்டர் தனியே நடந்துசென்ற அனுபவம் நான் இறக்கும்தருவாயில் நினைத்து பார்க்கும் அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். இக்காட்டில் சிங்கத்தை தவிர மற்ற அனைத்து விலங்குகளும் உண்டு. இம்மலை முழுக்க களக்காடு முண்டந்துறை வனவிலங்கு சரணாலயத்தின் கட்டுபாட்டில் உள்ளது. வெயில்காலங்களில் யானைகள் சர்வசாதாரணமாக சுற்றி திரியுமாம்.