10 Feb 2010

சதுரகிரி

     நம்ம தமிழ்நாட்டுல இரண்டுமலைகள் சித்தர்களுக்கு பெயர்போனவை. ஒன்று கொல்லிமலை இன்னொன்று சதுரகிரி. கொள்ளிமலைசித்தர்கள் மாயமாந்திரிக விஷயங்களுக்கு பெயர்போனவர்கள். நம்ம விட்டாலாச்சார்யா படம்மாதிரி. சதுரகிரி சித்தர்கள் வேறமாதிரி ரொம்பநல்லவங்க இறைவனை தேடுவதுதான் அவர்களுடைய குறிக்கோள். (இன்னும் கூட... கிடைத்தாரா..?)



    இச்சதுரகிரிமலை வத்திராயிருப்பிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில்உள்ளது. வத்திராயிருப்பிலுருந்து மலைக்குசெல்ல மினிபஸ்கள் மட்டும்தான். அதுவும் எப்போதாவது சிலநேரம் மட்டுமே. போகும்கூட்டத்தை பொறுத்தது. மற்றபடி ஷேர் ஆட்டோக்கள்தான். 9  கிலோமீட்டர் செல்ல 80 ரூபாய் கேட்கிறார்கள். சதுரகிரி சித்தர்கள் அருள் இவர்களுக்குத்தான் முழுமையாக கிடைக்கிறது போலும். பஸ்சிலோ அல்லது ஆட்டோவிலோ ஏறி அமர்ந்திர்கலேயானால் சுற்றிலும் மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் சூழ மலைகளினூடே ஒரு 15 நிமிட பயனத்திற்க்குபிறகு தானிப்பாறையை அடையலாம். தாணிப்பாறை என்பது மலையின் அடிவாரம். நீங்கள் ஏதாவது வாங்கவேண்டும் என்றால் வத்திராயிருப்பிலே வாங்கிவிடவேண்டும். (தீப்பெட்டியாக இருந்தால்கூட) இங்கு கிடைக்காது.


    தாணிப்பாறையில் பேருந்தைவிட்டு கிழே இறங்கினால் வனத்துறையின் பெரியஆர்ச் உங்களை வரவேற்க்கும். அதுதான் பாதை ஆரம்பமாகும் இடம். இப்பாதை சில இடங்களில் 10 அடியும் சில இடங்களில் 6  அடி அகலமும் கொண்டது. சில இடங்களில் கரணம் தப்பினால் மரணம்தான். இப்பாதையின் வழியே 4 மணிநேரம் (போகுபவர்களின் வயதை பொறுத்து மாறுபடும்)  பயணித்தால் மலையுச்சியினை அடையலாம். மலை உச்சி 7000 அடி உயரம். தூரம் 8 கிலோமீட்டர். போகும்வழிஎல்லாம் குறுக்கும் நெடுக்குமாக ஓடைகள் ஓடும். மழைகாலங்களில் நீர் அதிகமாக இருக்குமாம். போகும்வழி மிகஅழகு.



புராணம்.

   கைலாயத்தில்(இமயமலையில...)  சிவபெருமானையும் பார்வதியையும் தேவாதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வழிபட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இருவரையும் பிரதட்சணமாகச் சுற்றி வந்து வணங்கினர். பிருங்கி மகரிஷி மட்டும் சிவபெருமானை மட்டுமே சுற்றி வந்து வணங்கினார், பார்வதியை தவிர்த்துவிட்டு. பார்வதி சிவனைப் பார்த்து ஏன் அவர் தன்னைச் சுற்றி வரவில்லை எனக் கேட்டார். பூலோகத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு மோட்சகதியைத் தேடி தன்னிடம் வருவோருக்குத் தாம் மோட்சத்தை அளிப்பதாகப் பதிலளித்தார் mr. சிவம்.
உலக இன்பங்களை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் அவற்றை அடையும் சக்தியை தேவியிடமிருந்து பெறுவதால், தங்கள் இருவரையும் சேர்த்து வணங்குகி‎ன்றனர். ஆனால் பிருங்கி முனிவரோ தமக்கு மோட்சகதி மட்டும் கிடைத்தால் போதும் என விரும்புவதால் அவர் த‎ன்னை மற்றும் சுற்றி வந்து வணங்கியதாக மேலும் கூறினார் சிவ‎ன்.

இவ்வாறு சிவன் கூற, தன்னைத் தவிர்த்துவிட்டாரே எ‎‎‎ன்று கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி மகரிஷிக்கு சாபமிட்டார், அவருடைய சக்தியெல்லாம் இழக்கட்டும் என்று.
சக்தியை இழந்த மகரிஷி தடுமாறி கீழே விழ, த‎ன்னுடைய அடியாரைக் காக்கும் விதமாக ஓர் ஊ‎ன்றுகோலை எடுத்து சிவ‎ன் வீச, அதைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி பிருங்கி மகரிஷி வெளியேறினார். த‎ன்னை சிவனுட‎ன் இணைத்துக் கொண்டால் மட்டுமே த‎ன்னுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் எ‎ன எண்ணிய பார்வதி, சிவனின் இடப்புற உடலாகத் த‎‎ன்னை ஆக்கிக்கொள்ள வேண்டி தவம் செய்யப் புறப்பட்டார்.

பரம்பொருளை விட்டுப் பிரிந்த பார்வதி சதுரகிரி வந்தடைந்து தவம் செய்ய சரியான இடம் தேடி மலையுச்சியை அடைந்து கல்லால மரத்தி‎ன் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்யலானார். இந்த மரம் சட்டநாத முனிவரின் குகைக்கருகில் இருக்கிறது.


தெய்வத்தி‎ன் வருகையறிந்த சட்டநாதர் அவரை வரவேற்று, வந்த காரணத்தை வினவினார். பார்வதி தேவி‎யின் விளக்கத்தைக் கேட்டறிந்த சட்டநாதர், அவரது தவம் நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்தார்.பார்வதி தேவி சந்தனத்தைக் குழைத்து அத‎ன் மூலம் லிங்கம் ஒ‎ன்றை பிரதிஷ்டானம் செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்த தேவி, கடும் தவத்தை மேற்கொண்டார். feel பண்ணிய சிவ‎ன் தேவியி‎ன் தவத்தினை மெச்சி, த‎ன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தேவி வேண்டிய வரத்தினை அருளினார்.

சந்தன லிங்கத்தை தேவியே பூஜித்து வழிபட்டமையால் அதை தவத்தில் உயர்ந்த ரிஷிகளும், முனிவர்களும், சித்தர் பெருமக்களும் மட்டுமே பூஜிக்க வேண்டுமெ‎ன்று ஆணையிட்டார். இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் பக்தர்கள் த‎ன்னை இங்கே வந்து வழிபட்டால், இவ்வுலக வாழ்வி‎ன் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே அவர்கள் மோட்சகதியை அடையும் பக்குவத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இறுதியாக த‎ன்னுடன் இணைவார்கள் எ‎ன்றும் அறிவித்தார். அத‎ன் பின் எல்லோரையும் ஆசிர்வதித்த சிவபரமாத்மா த‎ன்னுடன் இணைந்த தேவியுட‎ன் அர்த்தநாரியாக கைலாயம் திரும்பினார். 


Returnback to வழி...  


     வழியில் விநாயகர், கருப்பசாமி, கோரக்கர் குண்டா, இரட்டைலிங்கம் போன்ற இடங்களை தாண்டிசென்றால் உங்களை முதலில் வரவேற்ப்பது பிலவாடி கருப்பசாமி கோவில் சுந்தரமகாலிங்கத்திர்க்கு மிக அருகில் உள்ள கோவில் இது. இதைத்தாண்டி சென்றால் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் என்ற இரண்டு கோவில்கள் உள்ளன. சந்தமகாலிங்கதிர்க்கு அருகில் அகாசகங்கா என்ற சிறு நீர்விழ்ச்சி உள்ளது. இன்னும் மேலே சென்றால் பெரியமகாலிங்கம், தவசிகுகை, வெள்ளை விநாயகர் ஆலயம் போன்றவை உள்ளன. ஆனால் இங்கெல்லாம் தனியாக செல்லமுடியாது. அழைத்து போவதற்கென்றே சில ஆட்கள் உள்ளனர். அவர்களுக்கு 300 முதல் நாம் ஏமாறுவதை பொறுத்து கட்டணம்.

   ஆனால் ஒன்று மலையில் 24 மணிநேரமும் அன்னதானம் உண்டு. ஒரு முக்கிய விஷயம் சமைக்கவேண்டிய அத்தனை பொருட்களும் கிழிருந்துதான் வரவேண்டும். so இப்பணியை மெச்சவேண்டும். இங்குவாழும் மலைவாழ் மக்களுக்கு பளியர்கள் என்று பெயர். இவர்கள் ஒருநாளைக்கு இரண்டு தடவை சாதரணமாக ஏறி இறங்குகின்றனர். இங்கு வருபவர்களின் சுமைகள் மற்றும் கோவிலுக்கு தேவையான உணவு பொருட்களை எடுத்து செல்வதுதான் இவர்களின் தற்போதைய தொழில்.

    இம்மலையிலுருந்து மளிகைபாறை, கடமலைகுண்டு வழியாக வருசநாடு தேனிக்கு ஒரு வழி உண்டு. அதேபோல் மலையின் உச்சியில் இருந்து சாப்டூர் வழியாக தேனிக்கு இன்னொரு வழியும் உண்டு. சுற்றிகொண்டு சென்றால் 100  கிலோமீட்டர்க்கு மேலே வருகிறது.


இம்மலையில் நீங்க எதைபார்த்தாலும் சித்தர்கள் என்று சொல்வார்கள். நாய், நரி, பூனை, பறவை இப்படி எதை பார்த்தாலும். நம்ம சிவனுக்கு ஹெட் கைலாயம் என்பது மாதிரி சித்தர்களுக்கு இம்மலை ஹெட்டாம். அதே மாதிரி நிறைய மனிதர்களும் தங்களை தாங்களே சித்தர்கள் என்று சொல்லிகொல்வார்கள்.(ஹேய் நானும் ரவுடி தான்யா..) நான் சந்தித்த நிறைய சித்தர்கள் தற்பெருமை வாதிகள்தான். சித்தனோ பித்தனோ இரண்டுமே ஒரு மனநிலைதான். முன்னது உலகோடு ஒட்டாத நிலை. அடுத்தது உலகமே புரியாத நிலை. இதுல எப்படி அமானுஷ்யம் வந்ததுனு தெரியல. மனிதர்களுக்கு அமானுஷ்யத்தின் மேல் இருக்கும் அவா போகும்வரை நிறைய "அவாக்களுக்கு" பணமழைதான். எது எப்படியோ மலை ஏறிகளுக்கு மிக சிறந்த இடம் இம்மலை.